search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் ராணுவ வீரர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தடுக்க முயன்ற தந்தையை பூஷன் தாக்கிய நிலையில் அவர் படுகாயமடைந்தார்
    • சகோதர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்து வந்ததே இந்த கொலைகளுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

    அரியானாவில் தனது தாய் உட்பட குடுபத்தினர் 6 பேரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் நராய்கர் [Naraingarh] நகர் அருகே உள்ள ரத்தோர் கிராமத்தில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த கொலைகள் அரங்கேறியுள்ளது.

    வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது தாய், சகோதரன், சகோதரனின் மனைவி மற்றும் அவர்களின் 7 வயது மகன் , 6 வயது மகள் மற்றும் 6 மாத குழந்தை உட்பட 6 பேரை பூஷன் குமார் என்ற அந்த முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்து அவர்களை வீட்டில் வைத்தே எரிக்க முயற்சி செய்துள்ளார்.  தடுக்க முயன்ற தந்தையை பூஷன் தாக்கிய நிலையில் அவர் படுகாயமடைந்தார்.  எனவே தந்தை சத்தம் எழுப்பி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

    இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பூஷனை கைது செய்துள்ளனர் . சகோதர்கள் இருவருக்கும் இடையில் 2.25 ஏக்கர்குடும்ப நிலம் நிலத்தகராறு இருந்து வந்ததே இந்த கொலைகளுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. 

    • திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
    • நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது மத்திய பாதுகாப்பு படை வீரர் உடையில் ஒருவர் வந்து அமர்ந்து மற்றவர்களுடன் சகஜகமாக பேசிக் கொண்டிருந்தார். திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

    பின்னர் வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் மைக் முன்பு வந்து நின்று நான் 3-வது முறையாக போட்டியிடுகிறேன். இது காலத்தின் கட்டாயம். எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் யாரையும் ஓட்டு போட விடமாட்டேன் என கூறி ரகளை செய்தார். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தனர். அப்போதும் அந்த நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர் வேட்பு மனுவும் தாக்கல் செய்யவில்லை.

    தொடர்ந்து அந்த நபரை போலீசார் வெளியேற்றினர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு
    • பாரத பிரதமர் மோடி, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு நன்றி

    இரணியல் :

    இரணியல் பேரூராட்சியில் நடந்த சாதாரண கூட்டம் தலைவர் ஸ்ரீகலாமுருகன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் அம்புஜம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ராணுவம் மற்றும் துணை ராணுவங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று 15-வது வார்டு கவுன்சிலர் செந்தில் ராமலிங்கம் கொடுத்த மனு மீது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் பாரத பிரதமர் மோடி, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு 4-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டார்

    • முன்னாள் ராணுவ வீரர் மகளிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது
    • ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக

    திருச்சி

    திருச்சி காந்தி மார்க்கெட் கள்ளத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா. முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகள் மாலா (வயது 27).

    இவரிடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், சென்னையில் மெட்ரோ ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பல்வேறு தவணைகளில் ரூ.3 லட்சத்தை பெற்றார். இதற்கு திருச்சியை சேர்ந்த வக்கீல் ஒருவரும் உடந்தையாக இருந்ததுள்ளார்.

    அதன்பிறகு அவர்கள் கூறியபடி ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் மாலா அவரைத் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அவர் விரைவில் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வரும் என்று கூறி காலதாமதம் செய்து வந்தார்.

    ஆனாலும் வேலை வாங்கித் தராததால் மாலா தன்னிடம் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்து விட்டதாக திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரை சந்தித்து கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பாலக்கரை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.அதன்பேரில் பாலக்கரை போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.

    ஆனால் அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த மாலா, தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி துணை கமிஷனர் சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தார்.

    • பிரச்சனை தொடர்பாக இவர்களது வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய கூறி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதோடு தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோரை பழனிவேல் தாக்கி உள்ளார்.
    • ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் இவர்கள் இருவரிடையே தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி திருக்குளத் தெருவில் குடியிருந்து வருபவர்கள் தமிழ்செல்வன் -சுதா தம்பதியினர்.

    குடியிருந்த வீட்டை கங்கா என்பவரிடம் ரூ.12 லட்சம் கொடுத்து வாங்கியதாக அதை காலிசெய்ய வலியுறுத்தி மூங்கில் தோட்டம் மெயின்ரோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் இவர்கள் இருவரிடையே தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த பிரச்சனை தொடர்பாக இவர்களது வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய கூறி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதோடு தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோரை பழனிவேல் தாக்கி உள்ளார்.

    மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

    இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து பழனிவேலை கைது செய்தனர்.

    கண்ணமங்கலம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 52). முன்னாள் ராணுவவீரர். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வங்கியில் வணிக தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு அனுஷா என்ற மகளும், அவினாஷ் என்ற மகனும் உள்ளனர். அவினாஷ் பெங்களூருவில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.

    அன்பழகன் தனது மனைவி மற்றும் மகளுடன் 2 நாட்களுக்கு முன்பு அவினாசை பார்க்க பெங்களூருவுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த சில ஆவணங்களையும் மர்மநபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தடய அறிவியல் துறையை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜும் அங்கு வந்து கதவு மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தார்.

    அதன் அடிப்படையில் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் பழைய குற்றவாளிகளா? என்ற கண்ணோட்டத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    சேலத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்ய போலீஸ் கமிஷனரிடம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை கிருஷ்ணன்நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 85). இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். வயது முதிர்வு மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    தற்போது நடக்க முடியாமல் ஊன்றுகோல் உதவியுடன் வாழ்கையை ஓட்டி வருகிறார். மேலும் இவரை உறவினர்கள் யாரும் கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என கிருஷ்ணன் முடிவு செய்தார்.

    இது குறித்து மனு கொடுப்பதற்காக இன்று காலை அவர் காரில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு நேராக காரில் சென்றார். அங்கு வரவேற்பு அறையில் இருந்த போலீசார், அவரை பத்திரமாக அழைத்து சென்று அங்கு போடப்பட்டுள்ள நாற்காழியில் உட்கார வைத்தனர். அவரிடம் போலீசார், ஏன்? என்ன வி‌ஷயம்? என விசாரித்தபோது, போலீஸ் கமி‌ஷனிடம் பேச வேண்டும் என கூறினார்.

    இது பற்றி கமி‌ஷனர் அலுவலகத்தின் மேல்மாடியில் இருந்த கமி‌ஷனர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், உடனே அங்கிருந்து வேகமாக நடந்து கீழ் தளத்தில் உள்ள வரவேற்புக்கு அறைக்கு வந்து கிருஷ்ணனிடம் என்ன வி‌ஷயம்? நான் என்ன உதவி செய்ய வேண்டும்? என கேட்டார்.

    அதற்கு கிருஷ்ணன், கமி‌ஷனரிடம் நா தழுதழுத்த குரலில் கண்களில் கண்ணீர் வடிந்த நிலையில் கூறியதாவது:-

    எனது தந்தை சுந்தர்ராஜன் தாசில்தராக இருந்து நாட்டுக்கு சேவை செய்தார். அதுபோல் நானும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இளம் வயதிலேயே இந்திய ராணுவத்தில் சேர்ந்தேன். பல போர்களில் கலந்து கொண்டு திறமையாக செயல்பட்டேன். தீவிரவாதிகளை ஒடுக்குவதிலும் திறமையாக செயல்பட்டோம். கடும் பனியிலும், குளிரிலும், இருட்டிலும் நாங்கள் விடிய விடிய தூங்காமல் பாதுகாப்பு கேடயமாக இருந்து கஷ்டப்பட்டு தீவிரவாதிகளை ஊடுருவாமல் தடுத்தோம். எனது முழு வாழ்க்கையும் நாட்டுக்காவே அர்ப்பணித்தேன்.

    ஓய்வு பெற்று விட்ட நான், கிருஷ்ணன் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறேன். இந்த நிலையில் எனக்கு நீரழிவு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகிறேன். ஆனால், நீரழிவு நோய் குணமாகவில்லை. தற்போது, முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    எனக்கு உணவு சமையல் செய்து கொடுப்பதற்கு கூட உறவினர்கள் மறுக்கிறார்கள். நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் தனக்கு மருந்து, மாத்திரைகளை எடுத்து கொடுப்பதற்கு கூட உறவினர்கள் யாரும் வருவதில்லை. அவசர நேரத்தில் யாராவது உதவிக்கு வாருங்கள்... வாருங்கள் என்று அழைத்தால் கூட ஒருவரும் வருவதில்லை.

    இதனால் நான், எனது வாழ்க்கையை முடித்து விட முடிவு செய்துள்ளேன். என்னை தயவு செய்து கருணை கொலை செய்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கமி‌ஷனர் சங்கர், உங்களது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கிறோம். அவர்கள் கூறும் தகவலின் அடிப்படையில், உங்களை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்கிறோம். நாங்கள் உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம். கவலைப்பட வேண்டாம் என்று கூறி அவரை ஆறுதல்படுத்தினார்.

    ஒரு முன்னாள் ராணுவ வீரர், தன்னை கருணை கொலை செய்யுங்கள் என்று கெஞ்சிய சம்பவம் அங்கிருந்த போலீசார் மத்தியில் நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது. #tamilnews
    ×